மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.6.11

என் உயிர் தோழியே...!


நெற்றிப் பொட்டிட்டு கால் மெட்டிட்டு
கூரப் புடைவைதனை குதிங்கால் வரை சூடி
எந்தன் குலவிளக்காகும் கூதிர்பூவே
நான் செய்யும் சிலநேர ஊடல்களில்
நற்றிணைப் பெண்போல் நாணம் வருமோ?
ஐவகை நிலமதில் எதுவுன் நிலம்
ஐவகை முடிதனில் எதுவுன் முடி
தெருவோர புழுதிகளே அகன்றோடுங்கள் - என்
தேவி இன்று நடை பயில்வாள்
வீதி மரங்களனைத்தும் மலர்கள் பொய்க
பெருமாட்டி பிஞ்சுப் பாதம் நோகாதிருக்க
மெல்ல நடைபயின்று தாழ்திறவாய் எம்பெண்ணே
கொலுசொலி சிணுங்கல்கள் - உன்
நாணத்தை வெளிக்கொணரும்
என் உள்ளம் ஆர்ப்பரிக்கும்
ஊணும் உயிரும் உறவாட
உனை ஈந்தனன் தேவன் எனக்கு
செம்மண் சிந்திய நீரது
அம்மண் கலந்து செவ்வியபோல்
நானும் நின்னும் கலந்தாகுக!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

தெருவோர புழுதிகளே அகன்றோடுங்கள் - என்
தேவி இன்று நடை பயில்வாள்

அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!!

Post a Comment