மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

15.6.11

நிலாத்தட்டும் நினைவலைகளும்..! -ஏதோ சொல்லனும்ணு தோணுச்சு

        பறக்கும் தட்டு பல பறந்து வந்ததாகவும்,அதில் வேற்று கிரகவாசிகள் பிரயாணம் செய்ததாகவும் அடித்துக்கூறும் அமெரிக்கர்களும்,ஐரோப்பியர்களும் நிலாத்தட்டை பார்த்து பழைய நினைவலைகளை முன்மொழிந்த முன்னோர்களின் வாய்மொழியை அவ்வப்போது அவிழ்த்துவிடுவார்கள் போலும்

  நிலவுகவிஞனுக்கு-பாடுபொருள்,அறிவியலோர்க்கு -ஆய்வுப்பொருள்,அன்னையர்க்கு-ஊட்டுப்பொருள்,மழலையர்க்கு-காட்சிப்பொருள்,காதலர்க்கு - சாட்சிப்பொருள்,வழிப்போக்கனுக்கு -பற்றுப்பொருள்.
    நிலவினால் பல நிமித்தங்களும்,சில சமிஞைகளும்,சம்பிரதாயங்களும்,சடங்குகளும்,பெளதீக மாற்றங்களும் தோன்றிமனித வாழ்வில் நிஜமான நிழலாக நிலவு கலந்துவிட்டது.
  ஒளி கொண்ட நிலவு -பெளர்ணமி
  ஒளியிழந்த நிலவு - அமாவாசை
  அமாவாசை,பெளர்ணமியில் ஆசியர்களும், ஆரியர்களும் -ஆருடங்களையும்,அமெரிக்கர்கள்-ஆய்வுகளையும் அரங்கேற்றுவது அனாசயமாகிப் போனது.பூமிப்பந்தின் இரவுக்கடலில் கலங்கரை விளக்காய் வரும்  நிலவு தன்னுள் மறைபொருள் பல கொண்டுள்ளது.அதன் முடிச்சை அவிழ்க்க நான் முற்படுகிறேன்.
  அதில் ஒன்றுதான்:
                பெளர்ணமி தேய்பிறையாகி அமாவாசை ஆவதும்,அமாவாசை பெளர்ணமியாய் அவதாரம் எடுப்பதும் மனித வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டேதான் என்பதை உலகோர்க்கு உணர்த்துவதாக உள்ளது.ஆயினும் முட்டி மறைக்கும் கருமேகத்திரள் தாண்டி குளிர் ஒளி வீசும் தன் கடைமையை செவ்வனே செய்வது,தடைகள் பல நம் வழியில் நடைபோட்டாலும் அவற்ரை எத்தனித்து நாம் நம் வாழ்வில் பிரகாசிக்க வேண்டும் என்பதைத்தான் அந்நிலாத்தட்டு நமக்கு நினைவுபடுத்துகிறது.

        (இது அகிலம் தங்கதுரையின் தற்குறிப்பேற்றம்)

0 கருத்துக்கள்:

Post a Comment