மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

23.6.11

கேள்விக்குறி?

வானவில்லை வளைத்து வந்து வட்டம் போட முடியுமா?
பூனைமுடி ஒன்று சேர்த்து தேரிழுக்க முடியுமா?
வானளவு மாக்கடலை வற்றவைக்க முடியுமா?
நாயின் வாலை நட்டுக்கு நிமித்திவிட முடியுமா?
சாக்கடையில் அமிழ்ந்திட்ட அரசியலை தூர்வார முடியுமா?
தின்று கொழுத்த திமிரிகளால் திரும்ப உணவு கிட்டுமா?
ஆத்திரத்தில் கனமழையை கொள்ளிக்கட்டை அவித்துவிட முடியுமோ?
சூத்திரத்தின் சாத்திரத்தை சுதேசி வெல்ல முடியுமோ?
பணம் தின்னி கழுகுகளால் பரதேசி பசி தீறுமா?
ஊழல் ஊற்றுக்கண்ணின் பாவை குருடாக்க இயலுமா?
பாரதமாதாவே யாசிக்கும் நிலைமை வரக்கூடுமோ?

0 கருத்துக்கள்:

Post a Comment