மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.4.11

எல்லாம் உன்னால் வந்த வினை..! (உனக்காக ஒரு டஜன் கவிதையிலிருந்து-ஒரு கவிதை)


இரவு நேரத்தில் முற்றத்திற்கெல்லாம் வராதே
எனக்கென்னவோ வின்மீன்களெல்லாம்-உன்னை
கண்ணடிப்பதைப் போல தெரிகிறது!                                              
                                                                                                                                                                மொட்டு; 1                                                                 மலர்ந்தது; பிப்ரவரி19,2005

நான் யார்?


செந்தமிழ் சீர் பெற்ற சுந்தரத் தமிழ்
சுடர் விடும் ஒளியினை
பிரதிபலிக்கும் ஆயிரமாயிரம் நிலாக்களில்
நானும் ஒரு பிறைநிலா
இதனிடத்து-என் இனிய தமிழ்ச் சான்றோர்க்கு
நான் கூறிக்கொள்வது யாதெனின்
இது எனக்கும்-இயற்கைக்குமான
பதினாறு வருட நட்பு
அமைதியின் பூரிப்பு
அழகான ஆழ்வுறவு
எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு
இக்கால இடைவெளியில்-என்
(கை)மைத் துளிகள்
சிந்திய சிப்பியின் சிதறடிப்பு
அழ்காக அடைகாத்த தமிழ்ப் பொன்குஞ்சுகள்
இப்போது தெரிகிறதா? நான் யார்?
உழைப்பின் மேன்மை உணர்த்தும்
இதே மே திங்கள் இருபத்தாறில்
பரணி ஓடும் தரணியின்
தரையில் தளிர்த்த-மாபெரும்
தமிழ் குடியின் ஒரு சிறுகொடி-என
என்னை அம்பலப்படுத்திக் கொள்ளும்
                            நான் யார்?
                   அகிலம் தங்கதுரை