மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

16.7.11

இரண்டாம் சொர்க்கம்


ஒருபைசா செலவின்றி உலக அதிசயம்
பல உன்னில் கண்டேன்
ஒளிசிந்தும் கண்பார்வை 'நயாகரா" எனலாம்
"பாபிலோன்" தோட்டம் இரட்டித்ததோ உன்னில்
பிண்ணிய கார்குழல் சீனப்பெருஞ்சுவரோ.!
பசிபிக்கை ஜெயித்த தேன்சுவை கிண்ணம்
இறக்கத்திலமைந்த "இரண்டாம் சொர்க்கம்"
ததும்பிப் பின்பிதுங்கிய "பெட்ரோனாஸ்"
தாளமிடுகிது தன்னால்
"நைல்நதி" பாயும் "ஆற்றுப்படுகை"
நளினம் பாடுது என்னிரவதனில்
கொடுத்து வைத்த கண்களெனக்கு..!

நம்பிக்கை..!

தெய்வ நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை
தேவதை உன்னை மட்டுமே
நம்பி வாழ்கிறேன் - நான்!

வானவில்லே வா வா

வானவில் பார்க்க 
மழைக்காலம் வேண்டாம்
உன்னைப் பார்த்தாலே போதும்...!




மோகம்



                                                                                                                               






தண்ணீருக்குகூட உன்மேல் ஆசை போலும்
உச்சியில் விட்ட தண்ணீர்
உள்ளங்கால்வரை வருடிப்பார்க்கிறதே..!

10.7.11

ஏனிந்த ஊழோ?


அன்பே அழகே ஆருயிர் நீயே
ஆயுதமென நீயெனைத் தாக்கி
ஆயுள்ரேகை நீளச் செய்தாய்
அனிச்சை செயலாய் அலையச்செய்தாய்
விழுப்புண் பட்டேன் விரகமானேன்
விடியாத இரவு நான் பல கண்டேன் -உன்
விந்திய மலைகள் விழுங்கப் பார்த்தேன்
மடுவாய் நானும் மாட்டிக்கொண்டேன்
நீல ஓடை நீந்தி வந்தேன்
நிலை தடுமாறி நெக்கென்று விழுந்தேன்
ஈரிதழ் பூவை விரிக்க நினைத்து
விரல் நுனி வேர்த்தது
என் விடியல் நனைந்தது
எத்தனை நாளோ ஏனிந்த ஊழோ?
இனிக்கும் கனிகள் சுவைக்க வருமோ?
ஏக்கம் தந்து ஏமாற்றி விடுமோ
வெள்ளிக் கிண்ணங்கள் விரல் வசப்படுமா
விலையேற்றம் போல் விதி முடிந்திடுமா
விடை சொல் வில்(லே) வேல் விழிப் பெண்ணே..!

7.7.11

கனவுக் கன்னி


நீ இல்லாது நீலவானம் நோக்கினேன் நிலவில்லை
எங்கே விண்மீன்கள் என்றாய்ந்தால்
விண்ணெல்லாம் உன் முகங்கள்-அன்றோ
வெள்ளையனை எதிர்த்து விடுதலை பெற்றோம்-இன்றோ
வெள்ளை மலரே நீ காதல் போராட்டம் செய்கிறாய்
நீ என்னை கைது செய்து மனச்சிறையில் அடைத்தாய்
இலையுதிர்ந்து துளிர்விட்டால் வசந்தம் ஆரம்பம்
பகலிரவு இருபொழுதும் உன்னினைவு ஆரம்பம்
வசந்த காலத்திற்கு முடிவுண்டு
வரும் நினைவுக்கோ முடிவில்லை
பாவையே நீயென்ன பாரிவள்ளல் உறவோ?
பகல் இரவு பாராது
கனவுகளை அள்ளித் தருகிறாய்
நீ வந்து முத்தமிட மறந்தன அனைத்தும்
உன்னைத் தவிர..!

காதல் அழைப்பிதழ்


பதினாறின் பருவமே பவிசு காட்டி காட்டி
ஏனுன் பகிரங்க மனதை
பதை பதைக்க வைக்கிறாய் -
துள்ளலோடு துணை தேடும்
சிட்டுக் குருவியைப் பார் சில்வண்டைப் பார்
எட்டிப்பறக்கும் பட்டாம் பூச்சியைப் பார்
துணை தேடிப் பறக்க - நீ மட்டும்
ஏன் சிறகை உடைத்துக் கொள்கிறாய்
நீலவானில் காதல்கீதம் பாடும்
வானம்பாடி போல் -உன்
துணைதேடி உலகினிலே ஒரு தடவை
காதலிக்கலாம் வா..!
கன்னிப் பருவமதில் கண்விழிகள் கதை சொல்ல
காற்றாடிபோல் சுற்றும் -உன்
மின்சார மனதை கட்டுப்படுத்தலாம்-ஆகவே
காதலிக்கலாம் வா..!
ஒரு சிறகில்லாமல் வானில் பறக்கலாம்
காகிதம் இல்லாமல் கவிதைகள் எழுதலாம்
விழித்திருக்கும் போதே கனவுகள் காணலாம்
கானல் நீர் போன்ற இவ்வாழ்வில்
கண்ணீர் தேவை இல்லை; காதல் மனமே
நிழலான வாழ்வில் நிஜமான மனம் காண
நீயும் நானும் காதலிக்கலாம் வா..!

காதல் சேவகன்


தித்திக்கும் தேமதுரம் சிங்காரப்பூவானம்
பூக்கள் தூவுதடி பூங்குயில் உனக்காக
கீழ்வானம் மஞ்சளரைக்கு கிளியே-நீ குளிக்க
உன் ஓரப்பார்வைக்கு ஒத்திவைத்தேன் -நித்தம்
உன் கண்ணில் நான் வாழ
உன் கண்ணென்ன காந்தமா? -காதலி
உன்னருகே கவர்ந்திழுக்கிறதே என்னை
உன் சிரிப்பில் பூக்கும் மொட்டு நான்
ஓயாது நெஞ்சில் உன்னினைவு மட்டுந்தான்
என் ரத்த அணுக்கள் கரையும் காகமாய்
உன் பேர் சொல்லி
நீ அணியும் ஆடையாகவா? -இல்லை
நீ உரசும் மஞ்சளகாவா?
தேவைக்கு சேவை செய்வேன்
தேரில் உன்னை ஏற்றி வைப்பேன்
தேயாத நிலவாய் ஆகிவிடு
என் வாழ்வில் நீ வந்து
தீபவொளி ஏற்றிவிடு..!