மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

2.6.11

காதல் பயணம்

 பேருந்து நிறுத்தமொன்றில் பேரழகு தரிசனம்
 பேச்சற்று மூச்சிரைக்க பிறவிப்பயன் கண்டேனடி
 முன்பிறவி அறியேனடி- நூறு பின்பிறவி வேண்டுமடி
 உன் பின்னல் பூவாய் கூந்தலேற
 உயிரினில் ஒன்றாய் ஜோடிசேர

 நீ நகரத்து பெண்ணா?-இல்லை
 கிராமத்து மண்ணா?
 என் உயிர் அள்ளித் தின்னா
 அவள் ஒற்றை வார்த்தை சொன்னா- நான்
 ஒளி விடுவேன் விண்ணாய்

 பேருந்து நூல் நகர- என் உயிரும் உடைந்ததடி
 எம் சிந்தயை திரள்கூட்டி
 செக்குப்பிழிந்த சாரின் சாரமாய்ந்தால்
 எந்தன் உடலின் உட்கூறு முழுதும்
 உனை புதையல்படுத்தியது தெரியவரும்

 நெஞ்சில் அகலா நினைவு கொண்டாய்
 நெடுஞ்சாலை போல் ஆசை தந்தாய்
 நினைவை நிஜமாய் மாற்றிவிடு
 நித்திய இன்பம் தந்துவிடு
 

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அது எந்த பஸ் ஸ்டான்ட் என்று சொல்லவே இல்லையே!

Post a Comment