மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.5.11

மாலை நேர மங்கிய ஒளியில் உன் பேரொளி நினைவுகள் நீ இல்லாத துயரத்தை உந்தித்தள்ள முற்படுகிறேன் வானெறி பந்துபோல் மீண்டும் அதிமுடுக்கத்துடன் என்னை மோதவருகிறது இப்போள் நான் என்ன செய்ய? நானொன்றும் காதல் நியூட்டனல்ல தக்க தீர்வு கண்டிட.....! விரைந்து வா...!!ய் (தமிழ்+ஆய்)

 தமிழா.. நீ தமிழாய்
 உலக உருண்டை உதித்ததில்
 தமிழ்க்குடிதான் பூர்வக்குடி
 தமிழ்தான் மற்றவைக்கு தொப்புள்கொடி
 தமிழா..நீ தமிழாய்

 இமயத்தில் கொடிநட்டு
 செந்தமிழ் சீர்பெற்று சுடர்விடும்
 சுந்தரத் தமிழினை
 சுருத்தில்லா அயல்மொழிகள்
 சூறையாடலாமா?
 தமிழா..நீ தமிழாய்

 முச்சங்கம் கண்டு
 மூவா நிலை கொண்ட
 முத்தான இளமைத்தமிழ்
 முன்தோன்றி மூடர் சிலரால்
 மொழிக்கலப்பு கொண்டாலும்
 முக்குளித்து தீந்தமிழாய்
 திரும்பியது தெரிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 அரைகுறை ஆங்கிலத்தால்
 அரிதாரம் பூசிக்கொள்ளும்
 அவையோர்கள் அவனியிலே
 நக்கீரன் தான் தோன்றி
 நாதனையே தோற்கடித்த
 நல்ல தமிழ் அறிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 உலகப்பொதுமறை தந்திட்ட
 உயர்ந்த மொழி நம்மொழி
 உள்ளிருந்து சொல்ல மறுக்கிறதா
 உன் மரமரத்த மனச்சாட்சி
 தமிழா..நீ தமிழாய்

 வண்டமிழை நுகர்ந்திட்ட
 வெளிநாட்டு வீரமாமுனி-தன்
 இறப்பினில் பிறப்பெடுத்தான்
 தமிழ்த்தாயின் புதல்வனென
 புத்தியில் உரைக்கிறதா
 பூர்வீக குடிமகனே-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 அரைகுறை ஆங்கிலத்தால்
 அரிதாரம் பூசிக்கொள்ளும்
 அவையோர்கள் அவனியிலே
 நக்கீரன் தான் தோன்றி
 நாதனையே தோற்கடித்த
 நல்ல தமிழ் அறிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 உலகப்பொதுமறை தந்திட்ட
 உயர்ந்த மொழி நம்மொழி
 உள்லிருந்து சொல்ல மறுக்கிறதா
 உன் மரமரத்த மனச்சாட்சி
 தமிழா..நீ தமிழாய்

 வண்டமிழை நுகர்ந்திட்ட
 வெளிநாட்டு வீரமாமுனி-தன்
 இறப்பினில் பிறப்பெடுத்தான்
 தமிழ்த்தாயின் புதல்வனென
 புத்தியில் உரைக்கிறதா
 பூர்வீக குடிமகனே-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 செந்தமிழை தீந்தமிழை சிங்கத்தமிழை
 சிங்காரப் பூந்தமிழை பைந்தமிழை பழந்தமிழை
 வண்டமிழை நீ கொண்டமிழை-கொன்றாயெனில்
 உனை குலமறுத்த கொடியவனென
 கொற்றம் சொல்லாதோ நம் குலச்செல்வம்-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 தமிழன்னை தாகம் தீர்த்திடு
 பிறமொழி மோகம் நீர்த்திடு
 தமிழ் பிறழ்வா சமுதாயம் காத்திடு
 வளர்தமிழ் மணத்துடன் வாழ்ந்திடு-வரும் தலைமுறைக்கு
 தனித்தமிழை தாரை வார்த்திடு.!

1 கருத்துக்கள்:

Post a Comment