பிகாசோ ஓவியங்கள்
பின்னடைவு கண்டதடி
மங்கை உன் பிறையழகால்
மதிமயங்கி மண்ணில் வீழ்ந்தேன்
முழு அழகை காட்டிவிட்டால்
மூச்சு முட்டி இறந்திடுவேன்
சித்தனைப் போல் நானிருந்தேன்
பித்தனைப் போல் பிணியாகி
எத்தனைப் போல் எட்டிப்பார்த்தேன்
எக்குத்தப்பாய் ஆனதடி - ஆண்மை
எரிமலையாய் வெடிக்குதடி
நீ தூங்கி எனையெழுப்பி இதிகாசம் எழுதச்செய்தாய்!
உன் உதட்டுப் பள்ளம்
உமிழ்ந்த எச்சில் மிச்சமாய்
உள்ளிருக்க தவமிருப்பேன்
உலகமதை உனக்களிப்பேன்
உன் கலசமதில் காப்பிடி தேன்
கடன் எடுக்க சம்மதமா?
காரிருளை அழகாக்கி
கார்குழலி துயில்கையிலே
கம்பனென்றும் பைரனென்றும்
ஜனனம் கண்டேன் சடுதியிலே
நரம்பு-முடி சூடாகி நடுஇரவில்
வியர்வையிலே நான் குளித்தேன்
தூரிகை ஒன்று தேடி
எட்டுத்திக்கும் ஏகிச் சென்று
தோற்கலானேன் துவண்டு போனேன்
முன்னழகை வடிக்க வேண்டி
உயிரோவியமாய் உனை வடித்தேன்
உயிர்முடிச்சதிலே கட்டி வைத்தேன்
பிறவிப்பயன் ஈட்டாது
பிணமாவேன் என்றிருந்தேன்
மோகனப் புன்னகையால்
முழுமை கண்டேன் பிறவியிலே
உயிரளித்தாய் உலகழகே
ஒளிவு மறைவில்லா பேரழகால்!
1 கருத்துக்கள்:
எக்குத்தப்பாய் ஆனதடி - ஆண்மை
எரிமலையாய் வெடிக்குதடி
உன் கலசமதில் காப்பிடி தேன்
கடன் எடுக்க சம்மதமா?
முழு அழகை காட்டிவிட்டால்
மூச்சு முட்டி இறந்திடுவேன்
ரசித்துப் படித்தேன். ரசனை மிகுந்த வரிகள். வாழ்த்துக்கள்!
Post a Comment