சித்திரையின் நித்திரையில் ஒரு முழுநிலா
அல்லியிடம் அன்பாய்ச் சொன்னது-அல்லியே
உன் அன்புக்குரியவன் வந்தேன்
பூத்து சிரித்த அல்லியோ
ஆதிமுதல் காதல் செய்தோம்
அருகிருக்கும் காலமேது!
ஆம்ஸ்ட்ராங்கை அழைத்துவரப் பணித்தேன்
பயனில்லை..!
காலின்ஸிடம் கண்டிப்பாய்ச் சொன்னேன்
கருணையில்லை..!
ரோஜா மணம் எழுப்ப
வண்டுகள் அதைச் சேர
நான் மட்டும் வாடுகிறேன்
நாயகன் உனைத் தேடி
நாம் கூட வழியின்றி
தற்கொலைக்கு முயற்சித்தால் தண்ணீரில் உன்னுருவம்
கண் திறந்து நான் பார்த்தால்
கண்ணீரால் கதை சொன்னாய்
காலங்கள் மாறினாலும் நான்மாறேன்
கண்மூடி உனையடைவேன் ஆவியாய்
ஆனந்தம் தருவேன் அன்பு அல்லியாய்.
அல்லியிடம் அன்பாய்ச் சொன்னது-அல்லியே
உன் அன்புக்குரியவன் வந்தேன்
பூத்து சிரித்த அல்லியோ
ஆதிமுதல் காதல் செய்தோம்
அருகிருக்கும் காலமேது!
ஆம்ஸ்ட்ராங்கை அழைத்துவரப் பணித்தேன்
பயனில்லை..!
காலின்ஸிடம் கண்டிப்பாய்ச் சொன்னேன்
கருணையில்லை..!
ரோஜா மணம் எழுப்ப
வண்டுகள் அதைச் சேர
நான் மட்டும் வாடுகிறேன்
நாயகன் உனைத் தேடி
நாம் கூட வழியின்றி
தற்கொலைக்கு முயற்சித்தால் தண்ணீரில் உன்னுருவம்
கண் திறந்து நான் பார்த்தால்
கண்ணீரால் கதை சொன்னாய்
காலங்கள் மாறினாலும் நான்மாறேன்
கண்மூடி உனையடைவேன் ஆவியாய்
ஆனந்தம் தருவேன் அன்பு அல்லியாய்.
1 கருத்துக்கள்:
தற்கொலைக்கு முயற்சித்தால் தண்ணீரில் உன்னுருவம்
very nice words
Post a Comment