மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

3.6.11

சினிமாவும்..!சிந்தனையும்..!சினிமா தமிழ் வளர்க்கிறதா?

                               இயல்,இசை,நாடகத்தமிழ் சற்று பரிணாம வளர்ச்சி கண்டு சினிமா ஆனது.ஆயினும் அந்த மூவியல்களும் உயிர்ரோட்டமாக கொண்ட தமிழ் வளர்ப்பு எனும் நிலை பிறழ்ந்து சினிமாத்தமிழ் சிங்காரத்தனத்துடன் சிலிர்ப்பு கூட்டியதே தவிர சீரிய நோக்குடன் செயல்படுகிறதா?

  சினிமாவின் நோக்கங்களாக கருதப்படுவன:
         1)தமிழ் வளர்ப்பதா?
         2)வரலாறு விதைப்பதா?
         3)மரபு காப்பதா?
         4)பொழுதுபோக்கு தருவதா?
         5)நீதிக்கருத்தை நிலைநாட்டுவதா?
                                        வரலாறு விதைப்பது என்றால் ;90 சத வரலாறுகள் காலம் கடந்து எழுதப்பட்டதும்,ஒரு சார்புத்தன்மை கொண்டும்,ஆங்கில இலக்கியங்கள் போல் கற்பனை கலந்தும் எழுதப்பட்டதும் ஆகும்.
                                              மரபு காப்பது என்றால்;அகநானூறு,புறநானூறு வாழ்வியலை பிரதிபலிக்கிறதா?.அப்படியெனின் "நான் அவன் இல்லை", "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" போன்ற திரைப்படங்கள் எம்மரபை பிரதிபலித்தன?ரசிகர்கள் எம்மரபை உட்கிரகித்தனர்.
                      நீதிக்கருத்தை நிலைநாட்டுவது என்றால்;அவர்களிடம் (சினிமாகாரர்கள்)என்ன நீதி இருக்கிறது?திரைமறைவு தில்லாலங்கடிகளை எழுத்துரு கொடுக்க சற்று என் விரல் கூசுகிறது."சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்"
                                       கவர்ச்சியை சந்தைப்படுத்துதல்தான் அவர்களின் சினிமா சிந்தனை.நீதிநெறியை நிலைநாட்ட நம் பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் சில  போதும்(சிறுபஞ்ச மூலம்,திருக்குறள்,நன்னெறி).அவற்றை படித்தாலே நீதியின்பால் நமது சிந்தனையும்,சீர்கேடான எண்ணமும் திருப்பப்படும்.நம்மவர்களோ வேஷதாரிகள் சொல்லும் வியாக்கியாயங்களை நிஜமென்று நம்புகின்றனரே?
                                      சரி,தமிழ் வளர்ப்பதென்றால் தலைப்பை மட்டும் தமிழில் வைத்து என்ன பயன்?அதில் காட்டப்படும் காட்சிகளும்,பாடல்களும் (Rap, Pop, Western mix) பாணி பாடல்கள்தான்.ஒன்றிரண்டு தமிழ் பாடல்கள் வந்தாலும் இசைச்சத்தம் அதன் இடுப்பொடித்து விடுகிறது.பின் எங்கே தமிழ் வளர்க்கிறது?
                                               தமிழின் மூவியலையும் மூழ்கடித்துவிட்டு மூழியாய் நின்று கொண்டிருக்கும் சினிமாவா தமிழ் வளர்க்கப் போகிறது.அட போங்கப்பா எனக்கு வேற வேலை இருக்கிறது.                                    

2 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மிகச் சரியான கருத்து!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

தமிழில் பேசினால் தரம் குறைந்து விடும் என்ற தாழ்வுமனப்பான்மையில் மூழ்கிக் கிடக்கும் தலைமுறை இது. மக்களின் மனதைப் பிரதிபலிப்பவைதான் கலைகள். இந்த சமுதாயம் உருப்படாது.

Post a Comment