மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

1.5.11

கவிஞன்



இவன் வார்த்தை வெள்ளத்தில் சிக்கி
கவிதையை நிதியுதவியாக தருபவன்
நீர் - நெருப்பு
இரண்டிற்க்கும் திருமணம் செய்விப்பவன்!
கடவுள் - கடல்
எச்சரிக்கும் அதிகாரம் படைத்தவன்
இவன் லேசர் கண்ணில்
பெண்கள் சிலபோது தோழிகள் மட்டுமல்ல
உரித்த கோழிகளுந்தான்!
இவனுடைய கற்பனா தேசத்திற்கு
எல்லைகள் கிடையா
இவன் காலமெனும் இரும்புத்திரைக்குள்
ஊடுருவிப்பாய்பவன்
இவனது எழுதுகோல் அஃறிணையையும்
உயர்திணையாக்கிவிடும்
இவனொரு சமதர்ம காவலன்
காகிதமே இவனுக்கு உணவு-இவன்
பேனா நீரை ஊற்றி
தாகம் தீர்த்துக்கொள்ளும் வினோதமானவன்...!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

கவிஞனுக்குப் புதிய வரையறை தந்த கவிஞரே, உமக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

Post a Comment