மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.5.11

மாலை நேர மங்கிய ஒளியில் உன் பேரொளி நினைவுகள் நீ இல்லாத துயரத்தை உந்தித்தள்ள முற்படுகிறேன் வானெறி பந்துபோல் மீண்டும் அதிமுடுக்கத்துடன் என்னை மோதவருகிறது இப்போள் நான் என்ன செய்ய? நானொன்றும் காதல் நியூட்டனல்ல தக்க தீர்வு கண்டிட.....! விரைந்து வா...!!ய் (தமிழ்+ஆய்)

 தமிழா.. நீ தமிழாய்
 உலக உருண்டை உதித்ததில்
 தமிழ்க்குடிதான் பூர்வக்குடி
 தமிழ்தான் மற்றவைக்கு தொப்புள்கொடி
 தமிழா..நீ தமிழாய்

 இமயத்தில் கொடிநட்டு
 செந்தமிழ் சீர்பெற்று சுடர்விடும்
 சுந்தரத் தமிழினை
 சுருத்தில்லா அயல்மொழிகள்
 சூறையாடலாமா?
 தமிழா..நீ தமிழாய்

 முச்சங்கம் கண்டு
 மூவா நிலை கொண்ட
 முத்தான இளமைத்தமிழ்
 முன்தோன்றி மூடர் சிலரால்
 மொழிக்கலப்பு கொண்டாலும்
 முக்குளித்து தீந்தமிழாய்
 திரும்பியது தெரிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 அரைகுறை ஆங்கிலத்தால்
 அரிதாரம் பூசிக்கொள்ளும்
 அவையோர்கள் அவனியிலே
 நக்கீரன் தான் தோன்றி
 நாதனையே தோற்கடித்த
 நல்ல தமிழ் அறிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 உலகப்பொதுமறை தந்திட்ட
 உயர்ந்த மொழி நம்மொழி
 உள்ளிருந்து சொல்ல மறுக்கிறதா
 உன் மரமரத்த மனச்சாட்சி
 தமிழா..நீ தமிழாய்

 வண்டமிழை நுகர்ந்திட்ட
 வெளிநாட்டு வீரமாமுனி-தன்
 இறப்பினில் பிறப்பெடுத்தான்
 தமிழ்த்தாயின் புதல்வனென
 புத்தியில் உரைக்கிறதா
 பூர்வீக குடிமகனே-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 அரைகுறை ஆங்கிலத்தால்
 அரிதாரம் பூசிக்கொள்ளும்
 அவையோர்கள் அவனியிலே
 நக்கீரன் தான் தோன்றி
 நாதனையே தோற்கடித்த
 நல்ல தமிழ் அறிவாயோ?
 தமிழா..நீ தமிழாய்

 உலகப்பொதுமறை தந்திட்ட
 உயர்ந்த மொழி நம்மொழி
 உள்லிருந்து சொல்ல மறுக்கிறதா
 உன் மரமரத்த மனச்சாட்சி
 தமிழா..நீ தமிழாய்

 வண்டமிழை நுகர்ந்திட்ட
 வெளிநாட்டு வீரமாமுனி-தன்
 இறப்பினில் பிறப்பெடுத்தான்
 தமிழ்த்தாயின் புதல்வனென
 புத்தியில் உரைக்கிறதா
 பூர்வீக குடிமகனே-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 செந்தமிழை தீந்தமிழை சிங்கத்தமிழை
 சிங்காரப் பூந்தமிழை பைந்தமிழை பழந்தமிழை
 வண்டமிழை நீ கொண்டமிழை-கொன்றாயெனில்
 உனை குலமறுத்த கொடியவனென
 கொற்றம் சொல்லாதோ நம் குலச்செல்வம்-ஆதலால்
 தமிழா..நீ தமிழாய்

 தமிழன்னை தாகம் தீர்த்திடு
 பிறமொழி மோகம் நீர்த்திடு
 தமிழ் பிறழ்வா சமுதாயம் காத்திடு
 வளர்தமிழ் மணத்துடன் வாழ்ந்திடு-வரும் தலைமுறைக்கு
 தனித்தமிழை தாரை வார்த்திடு.!

உழவன்

உன் குலம் வளர்க்க
தன்குலப் பட்டினியை
தாங்கிக்கொள்ளும் தன்னிகரற்றவன்..!

தொலைக்காட்சி

தூபம் போடாவிட்டாலும்
ஒவ்வொரு வீட்டிலும்
பூஜிக்கப்படும் இறைப்பொருள் இவன்..!

நடிகை

நன்றாகத்தான் நடிக்கிறாள்
தன் கணவனிடமும்
கற்பிடமும்..!

ராணுவ வீரன்

காக்கி கருவறைக்குள்
நாட்டை காக்கும்-இவன்
தாய்மையை விஞ்சுபவன்..!

காஷ்மீர்

தலைப்பாகை சுற்றி
தலையை மறைத்தாலும்-உள்ளிருக்கும்
புண் சீழ் வடிக்கத்தான் செய்கிறது..!

பூட்டு

கணவானின் கையிருப்பை
காட்டிக் கொடுத்துவிட்டு
தூக்கிலிட்டுக் கொண்டான் கதவில்..!

காவியக் காதலும்..,கலாச்சார இந்தியாவும்.

 காவியக் காதலர்கள் கண்ணகியும் - கோவலனும்
 கோவலனின் லீலைகளை காணச்சகியா கண்ணீர் சொரிய
 வீடு திரும்பிட்ட கணவனை திடுக்கிட்டு நோக்கி

 எனக்கு திலகமிட்டவரே திரும்பி வந்தீரே?
 இன்பம் திகட்டியதோ  இருப்புப் பணம் தீர்ந்தனவோ?
 இதோ என் சாமரமும் சங்குச் சங்கிலியும்
 சட்டென விற்று சந்தோசத்தில்  திளையுமென்றாள்

 மாதவிகூட மாலைக்கு "மதிப்பளிக்கும்"
 மன்னவனுக்கு மட்டுந்தான்
 மார்பிலே துயிலவும் மஞ்சத்தில் புரளவும்
 மார்க்கம் செய்திருந்தாள்-ஆனால்
 இன்றைய மாதுக்களோ மானங்கெட்டவர்கள்

 கடலோர கடலைக்கும் காரில் பவனிக்கும்-கடலருகே
 கற்புக்கு கலைவிழா நடத்துறீங்க
 கலாச்சார இந்தியாவா இல்லை
 காபிரியேல் கண்டித்த சோதோம் கொமோராவா?

 பெண்களே பெரியவர்கள் என பிரச்சாரம் செய்துவிட்டு
 பின்புறத்து வாசல் வழி பிறனுக்கு பிடிகொடுத்து
 வயிற்றின் பாரத்தை குறைத்துவிட்டு
 மடிப்பணத்தின் கணத்தை "கூட்டிவிட்டாய்"

 ஆடைதனில் தொங்கலிட்டு அங்கங்கே சன்னல் வைத்து
 அங்க அழகுகளை எங்கள்முன் காட்டிவிட்டு
 எதற்கெடுத்தாலும் எங்களையே குற்றம்சாட்டு

 ஆடைகுறைப்பில் ஆணினத்தை சூடேற்றி
 அவன் கைப்பிடித்தான் இவன் இடுப்பொடித்தானென
 எங்கள் மேல் பழிபோடு!
 அரைகுறை ஆடையில் அங்குமிங்கும் அலையும்போது
 அம்போணு விட்டுவிட ஆணினமென்ன அஃறினை ஜாதியா?

 பட்டணத்து பகிடிகள்
 பட்டோடப வாழ்விற்கும் பணப்புழக்கத்திற்கும்
 ஆடம்பர அறைகளிலே படுக்கையை பகிர்ந்துவிட்டு
 காவலர் கைதின்போது கவுரவ குடும்பத்து
 கண்மணிகளென கண்ணீர் வடிக்கிறீங்க
 அடடே..! என்னே ஒரு மாண்பு..!

 கைத்துணியை மடித்து முகத்தை மட்டும் மறைத்து
 பண்பாட்டு இந்தியாவை பலருக்கு மத்தியில்
 பல்லிளிக்கச் செய்திட்டீங்க

 அரசு மருந்தகத்தில்
 கருக்கலைப்பு செய்தோரின்
 அன்றாட எண்ணிக்கை கணக்கின்றிபோயிற்று

 ஒத்துக்கொள்கிறேன்
 பெண்கள்தான் பிறப்பிடம்
 பெண்கள்தான் உறைவிடம்-ஆனால்  இன்று
 பல பெண்களே சாக்கடையின் தேக்கிடமும் கூட..!
        
     மொட்டு :27  மலர்ந்தது :16-01- 2004

28.5.11

நண்பேன்டா....

 வாழ்க்கை என்பது வானம் போல
 உறவு அதில் மேகம் போல
 நண்பன் மட்டும் சூரியன் போல
 நண்பன் வாழ்க...!





11.5.11

சம்மதமா? கனவு நிஜமாகுமா?


  சிப்பிக்குள் முத்தாக
  சிந்தனையில் கருத்தாக
  வித்துக்குள் உயிராக
  வேருக்கு மண்ணாக
  கனலுக்குள் நெருப்பாக
  கவிதைக்குள் சொல்லாக
  இரவுக்கு நிலவாக
  மலருக்கு மணமாக
  கனவுக்குள் நிஜமாக
  கடிகார முள்ளாக
  கனிக்குள் விதையாக
  விதைக்குள் கனியாக
  நீருக்குள் நெருப்பாக
  நெருப்புக்குள் நீராக
  ஊணுக்குள் உயிராக
  உயிருக்குள் உறவாக
  உனக்கு நானாக
  எனக்கு நீயாக
  வாழ்ந்திருக்க சம்மதமா?

ஆயுள்சந்தா


 நீ காதல் புத்தகம் எழுதுவதாக இருந்தால் சொல்
 கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது
 "ஆயுள்சந்தா" கட்டிவிடுகிறேன்...!

   மொட்டு:2   மலர்ந்தது;பிப்ரவரி 19'2005

நிலா முகம்



உன் நெற்றியில் கறுப்பு பொட்டு ஒட்டாதே-அது
பளிங்கு போன்ற உன் முகத்தை
கரும்புள்ளி போல களங்கப்படுத்துகிறது..!

   மொட்டு;12    மலர்ந்தது: பிப்ரவரி 19'2005

5.5.11

புல்லுக்கே புல்லரித்தது..!

   
 புல்லுக்கே புல்லரித்ததாம்-பூங்காவில்
 உன் பாதம் பட்ட
 புல்தரை கூறியது என்னிடம்.

காதல் மனைவி (இன்றைய ஹைக்கூ)


 நீ நித்தம் பூக்கும்
 மொட்டுப் பூக்களின்
 'பூங்கொத்து'

உங்களுக்குத் தெரியுமா?

Mona Lisa headcrop.jpg           
                              ஒரு ஓவியம் வரைய ஒருநாள்,ஒருவாரம்,ஒருமாதம் கூட ஆகலாம். ஆனால் பதினாறு வருடம் வரையப்பட்ட ஓவியம் எதுவென்று தெரியுமா?.       அது என்றும் இளமை கொண்ட மோனலிசா ஓவியம்தான்.1503ல் லியனார் டா வின்சியால் வரைய வரைய ஆரம்பிக்கப்பட்டு வரைதல்,வர்ணம் தீட்டுதல் என 16 வருடம் எடுத்துக்கொண்டது இவ்வோவியம்.

4.5.11

வெட்கத்தின் நிறம்


குளியலறையில் ஒரு நாள்
குபீரென்று சத்தமிட்டேன்
பதறிக்கொண்டு ஓடி வந்தாய்
பொட்டுக்களை எடுத்துவிடு-உன்
வெட்கத்தை நினைவு செய்து
எனை நினைவிழக்கச் செய்தனவே
'குறும்பு' என்று கொஞ்சிச் சென்றாய்
அட..! உண்மையில் 
வெட்கத்தின் நிறம் சிவப்புதானோ?

 மொட்டு: 10  மலர்ந்தது: 03-05- 2011

3.5.11

என்ன நேர்ந்தது?

 
இமயமலைப் பகுதிக்கு - உன்னை
இன்பச் சுற்றுலா கூட்டிச்செல்வதாய் இல்லை
பாவம்..!எவரெஸ்ட் சிகரம் உன்னழகில் உருகக்கூடும்.
     
       மொட்டு;12     மலர்ந்தது: பிப்ரவரி 19'2005

என் உயிரானவள் நீ

'அ'ழகின் அழகே அணுகுண்டு விளைவே  
'ஆ'சைகள் கோடி வளர்த்தேன் தோழி 
'இ'ன்பக் கனவே-என் இரண்டாம் நிலவே  
'ஈ'ரெட்டு புயலே ஈர்த்தமை என்னை  
'உ'யிரை எடுத்து உன்னில் இணைத்து  
'ஊ'ணை வறுத்தி உன்னுள் அமிழ்த்தி  
'எ'ன்னை சிதைத்து ஏதோ செய்த 
'ஏ'ந்திழை நீயே  
'ஐ'க்கியமானேன் ஐங்குறு நிலமே 
'ஒ'ரு நாளும் மறையா 
'ஓ'வியப் பெண்ணே-என் பிணி தீர்க்கும் 
'ஔ'டதம் நீதான்...!  
                                                                                                        மொட்டு:112                                               மலர்ந்தது: 03-05- 2011

1.5.11

கவிஞன்



இவன் வார்த்தை வெள்ளத்தில் சிக்கி
கவிதையை நிதியுதவியாக தருபவன்
நீர் - நெருப்பு
இரண்டிற்க்கும் திருமணம் செய்விப்பவன்!
கடவுள் - கடல்
எச்சரிக்கும் அதிகாரம் படைத்தவன்
இவன் லேசர் கண்ணில்
பெண்கள் சிலபோது தோழிகள் மட்டுமல்ல
உரித்த கோழிகளுந்தான்!
இவனுடைய கற்பனா தேசத்திற்கு
எல்லைகள் கிடையா
இவன் காலமெனும் இரும்புத்திரைக்குள்
ஊடுருவிப்பாய்பவன்
இவனது எழுதுகோல் அஃறிணையையும்
உயர்திணையாக்கிவிடும்
இவனொரு சமதர்ம காவலன்
காகிதமே இவனுக்கு உணவு-இவன்
பேனா நீரை ஊற்றி
தாகம் தீர்த்துக்கொள்ளும் வினோதமானவன்...!

என்னிடமிருந்து இன்று---


நாம் சோற்றில் கைவைக்க
உழவன் சேற்றில் கால் வைக்கிறான்
உழைப்பின் மேன்மை உணர்த்தும்
இந்நாளில் அவன் வாழ்வில் மேன்மை பொங்கட்டும்


                "மேன்மை தாங்கிய மே தின வாழ்த்துக்கள்"