மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

7.7.11

காதல் அழைப்பிதழ்


பதினாறின் பருவமே பவிசு காட்டி காட்டி
ஏனுன் பகிரங்க மனதை
பதை பதைக்க வைக்கிறாய் -
துள்ளலோடு துணை தேடும்
சிட்டுக் குருவியைப் பார் சில்வண்டைப் பார்
எட்டிப்பறக்கும் பட்டாம் பூச்சியைப் பார்
துணை தேடிப் பறக்க - நீ மட்டும்
ஏன் சிறகை உடைத்துக் கொள்கிறாய்
நீலவானில் காதல்கீதம் பாடும்
வானம்பாடி போல் -உன்
துணைதேடி உலகினிலே ஒரு தடவை
காதலிக்கலாம் வா..!
கன்னிப் பருவமதில் கண்விழிகள் கதை சொல்ல
காற்றாடிபோல் சுற்றும் -உன்
மின்சார மனதை கட்டுப்படுத்தலாம்-ஆகவே
காதலிக்கலாம் வா..!
ஒரு சிறகில்லாமல் வானில் பறக்கலாம்
காகிதம் இல்லாமல் கவிதைகள் எழுதலாம்
விழித்திருக்கும் போதே கனவுகள் காணலாம்
கானல் நீர் போன்ற இவ்வாழ்வில்
கண்ணீர் தேவை இல்லை; காதல் மனமே
நிழலான வாழ்வில் நிஜமான மனம் காண
நீயும் நானும் காதலிக்கலாம் வா..!

0 கருத்துக்கள்:

Post a Comment