மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

17.9.11

அறவும் துறவும்


சிந்தனையை கூறுவைத்து
சிவதவம் பூண்டிருந்தேன்
போதிமரம் தேடி போகலாமென்றிருந்தேன்

சிரிக்கி நீ வந்து
சித்தத்தை கிளறிவிட்டாய்
ஆறாத ரணமொன்றை அழகாய் உருவாக்கி

என்னுள் கொழுத்துவிட்டாய்
எண்ணங்கள் எடுத்துக்கொண்டாய்
குறிஞ்சி மலரொன்றை கூந்தலில் நீ சூடி

மூச்சிரைக்க ஓடிவந்தாய் முடியழகே
மோட்சம் நான் கண்டேனே- சற்று
முந்திச் சென்ற பேருந்தால்....!

வண்டமிழே தேன்மொழியே
வாய்மொழி நீ பேச
வாயொழுகி நான் நின்றேன்

ஈக்களின் எண்ணிக்கை எதிரில் கண்டு
வருவோரும் போவோரும்
வசைமாரி பொழிந்து செல்ல

துப்பாக்கி சுடுவோன் போல்
உன்னையே குறி கொண்டேன் - ஆயினும்
உன்னால் நான் சூடுபட்டேன்

வாளினை வீசிவிட்டாய்
வாழ்வினை கூறுபோட்டாய் - நெஞ்சினில்
வாசனை மரம் நட்டாய் 

கர்வத்தை உடைத்தெறிந்து
கனவுலகை ஆக்கிரமித்து கடையேழு வள்ளல்போல்
கொடைமாரி பொழிகின்றாய்

பூவே நீ வந்து விடு
பூப்பறிக்க வந்து விடு
புதுவாழ்வு தந்து விடு

இறைவா..! இறைஞ்சுகின்றேன்
இழிவாய் எனை நினைக்காதே - இது
உன்னால்தான் வந்த வினை

ஒப்பற்ற ஓரழகை
ஏன் உலவ விட்டாய்
என் கண் முன்னே..!

வாடி வதங்குகின்றேன்
வரமொன்று கொடுத்துவிடு
வாழ்வின் பெருந்தவத்தை

வசமாக்கி கொடுத்துவிடு
வார்த்தை தவறிவிட்டால்
வடக்கிருக்க நான் செல்வேன்..!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

வார்த்தை தவறிவிட்டால்
வடக்கிருக்க நான் செல்வேன்..!


நான் ரசித்த வரிகள்

Post a Comment