மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

9.8.11

ஒலி-ஒளிக்கவிதை(குழந்தை)






நீ எங்கள் சந்தோஷத்தின் சாவி
விடியல் முற்றங்களின் பூக்கோலம்
உனைக் காணத்தான்
மொட்டுக்கள் மலராய் அவிழ்ந்தன
உந்தன் சிரிப்பொலி
எங்கள் ஏழிசை கீதமானது
சூரியனை சுடராக்கி -உன்
மேனியில் சூடிக்கொண்டாய்
பொழுதுகள் பல போக்கி
காரியங்கள் காண மறந்தோம்
கண்ணீர்த் திவலைகள் -உன்னால்
கானல் நீராயின
உன் மழலை மொழி
தேவாரப் பாடலானது
கடவுளின் கொடை நீ -எம்
வாழ்வின் விடை நீ -எம்மை
எடுத்துச் செல்லும் வரலாற்றுப் புத்தகம் நீ            
வானங்கள் உனைக் காண
வானவிலாய் வளைந்தன
நீர்த்துளிகள் உன் குளியலால்
தீட்சை பெற்றன
தெய்வங்கள் உன் வடிவில்
தரிசனம் தந்தன
எங்கள் இன்பத்தின் எவரெஸ்ட் நீ
கையிருப்பின் உண்மையான வைரம் நீ
வாழ்க நீ வளர்க
வளங்களின் வனப்போடு..!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைசசொல் கேளா தவர்

Post a Comment