கடந்து கொண்டிருக்கும்
காலச்சக்கரத்தை உன்னால்
தடுத்து நிறுத்த முடியுமா?
காற்று வீச கட்டளையிட முடியுமா?
காலை மலர்ந்து மாலை மடியும்
மலர்தான் உன் நிதர்சனம் -அதற்குள்
எத்தனை வீம்பு
எத்தனை வில்லத்தனம்
அடுத்தவன் தோல்வியில் ஆனந்தம்
அடுத்தவன் பொருளில் ஆசை
அதுவும் அளவில்லாத ஆசை
அன்பில்லாத அஃறிணை. குணம்
ஆயுதங்களால் அளந்து கொள்வது ஆணவத்தால் அழிவு தேடுவது
ஆண் பெண்ணென்றும்
பெண் ஆணென்றும் பிறழ்வுகள் கொண்ட மனிதா
உன்னை நீ உன் சுயமென்று சூளுரைக்க முடியுமா?
போலி வேஷம் போட்டுக்கொண்டு புனிதனாகப் பார்க்கிறாய்?
வெள்ளையில் வீதி உலா
மனதிற்குள் அமாவாசை
மக்கள் மாக்கள் ஆகலாம் -ஆனால்
மாக்கள் தன் சுயம் இழப்பதில்லை
மண் தன் பண்பினால் பாண்டம் ஆகிறது
விளைபொருளாக வினைபொருளாக
மண் மண்ணாகவே இருக்கிறது
விண் விண்ணாகவே இருக்கிறது
நீ மட்டுமே
நடிக்கிறாய்
அடுத்தவன் வயிற்றில் அடிக்கிறாய்
என்னால் முடிமெல்லாம் என முஷ்டி தட்டுகிறாய்
முதிர்வில் படுத்துவிட்டால் கூட
முற்றும் உணர மறுக்கிறாய்
உன்னை என்ன சொல்வது
கழுதை தின்னும்
காகித்த்திற்காய் (பணம் )
கண்ட வழி செல்கிறாய்
கொண்டவரைக் கொல்கிறாய்
ஆனால்
மனிதன் தன் மாண்பினால் மண்ணாகிப்போகிறான்
21.9.14
மண் - மனிதன்.- மாண்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment