நீங்கள் இழப்புணியை சந்தித்ததுண்டா?
என்ன முழிக்கிறீர்கள்? இழப்புணி என்பவர் கணவன்,குழந்தை ஆகியோரையும் சொத்தையும்,பணத்தையும் இழந்த பெண்ணைக் குறிக்கும் பதமாகும்.
நாம் அடிக்கடி சுவரொட்டிகளில் சிலர் இறந்ததை "அகாலமரணம்" அடைந்தார் என படித்திருப்போம்.இச்சொல்லை சிறியவர்,பெரியவர் என வித்தியாசமின்றி பயன்படுத்தியிருப்பர்.ஆனால் உண்மையில் அகாலமரணம் என்பது இளம்வயது சாவை மட்டுமே குறிக்கக்கூடியது.ஏனெனில் அவர் இயல்பாக அனைவரும் உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டிய நாட்களை,சுகதுக்கங்களை இழந்துவிட்டதால்
மேற்கண்ட "சொற்றொடரைப் (அல்லது) தலைப்பை" நீங்கள் படித்ததும் "பேத்தி எதைக்கண்டு மருவினாள்" என கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்கு விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
"பெயர் சொல்ல வந்தவள்" எனும் பொருள் கொண்ட தமிழ் வார்த்தையான "பெயர்த்தி" தான் "பேத்தி"யாக மருவியுள்ளது மனிதர்களின் காலச்சூழலில்.