செந்தமிழ் சீர் பெற்ற சுந்தரத் தமிழ்
சுடர் விடும் ஒளியினை
பிரதிபலிக்கும் ஆயிரமாயிரம் நிலாக்களில்
நானும் ஒரு பிறைநிலா
இதனிடத்து-என் இனிய தமிழ்ச் சான்றோர்க்கு
நான் கூறிக்கொள்வது யாதெனின்
இது எனக்கும்-இயற்கைக்குமான
பதினாறு வருட நட்பு
அமைதியின் பூரிப்பு
அழகான ஆழ்வுறவு
எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு
இக்கால இடைவெளியில்-என்
(கை)மைத் துளிகள்
சிந்திய சிப்பியின் சிதறடிப்பு
அழ்காக அடைகாத்த தமிழ்ப் பொன்குஞ்சுகள்
இப்போது தெரிகிறதா? நான் யார்?
உழைப்பின் மேன்மை உணர்த்தும்
இதே மே திங்கள் இருபத்தாறில்
பரணி ஓடும் தரணியின்
தரையில் தளிர்த்த-மாபெரும்
தமிழ் குடியின் ஒரு சிறுகொடி-என
என்னை அம்பலப்படுத்திக் கொள்ளும்
நான் யார்?
அகிலம் தங்கதுரை