29.7.15
21.9.14
மண் - மனிதன்.- மாண்பு
கடந்து கொண்டிருக்கும்
காலச்சக்கரத்தை உன்னால்
தடுத்து நிறுத்த முடியுமா?
காற்று வீச கட்டளையிட முடியுமா?
காலை மலர்ந்து மாலை மடியும்
மலர்தான் உன் நிதர்சனம் -அதற்குள்
எத்தனை வீம்பு
எத்தனை வில்லத்தனம்
அடுத்தவன் தோல்வியில் ஆனந்தம்
அடுத்தவன் பொருளில் ஆசை
அதுவும் அளவில்லாத ஆசை
அன்பில்லாத அஃறிணை. குணம்
ஆயுதங்களால் அளந்து கொள்வது ஆணவத்தால் அழிவு தேடுவது
ஆண் பெண்ணென்றும்
பெண் ஆணென்றும் பிறழ்வுகள் கொண்ட மனிதா
உன்னை நீ உன் சுயமென்று சூளுரைக்க முடியுமா?
போலி வேஷம் போட்டுக்கொண்டு புனிதனாகப் பார்க்கிறாய்?
வெள்ளையில் வீதி உலா
மனதிற்குள் அமாவாசை
மக்கள் மாக்கள் ஆகலாம் -ஆனால்
மாக்கள் தன் சுயம் இழப்பதில்லை
மண் தன் பண்பினால் பாண்டம் ஆகிறது
விளைபொருளாக வினைபொருளாக
மண் மண்ணாகவே இருக்கிறது
விண் விண்ணாகவே இருக்கிறது
நீ மட்டுமே
நடிக்கிறாய்
அடுத்தவன் வயிற்றில் அடிக்கிறாய்
என்னால் முடிமெல்லாம் என முஷ்டி தட்டுகிறாய்
முதிர்வில் படுத்துவிட்டால் கூட
முற்றும் உணர மறுக்கிறாய்
உன்னை என்ன சொல்வது
கழுதை தின்னும்
காகித்த்திற்காய் (பணம் )
கண்ட வழி செல்கிறாய்
கொண்டவரைக் கொல்கிறாய்
ஆனால்
மனிதன் தன் மாண்பினால் மண்ணாகிப்போகிறான்
22.5.14
அழகிய மான்
அழகே அழகா
எனக்கே முதலா?
ஐதர் கால புதையல் நீயா?
ஊசியின் காதில்
ஓசையின்றி நுழையும் நூல்போல் உள்ளத்தில் நுழைந்து
மையம் கொண்ட தையலே
கண்ணை மட்டும் தந்துவிட்டு
ஒளியினைப் பறித்துக் கொண்டாய்
கைத்தடியாக வருவாயா ?
காலமெலாம் கரைசேரப்பாயா
மறுத்து நீ முறைப்பாயோ ?
என் மானமதை காப்பாயா
மனம் புழுங்க விடுவாயோ
19.5.14
18.12.11
முள்ளுப்பெரியார்
ஆலமரத்தை பிடித்துள்ளது போல்
ஏமாளித்தனந்தான் நம் தமிழரனைவரையும்
ஏந்திப்பிடித்துள்ளது போலும்!
பிச்சை போட்டு பிழைத்ததனை
மறந்துவிட்டான் மனிதன்...
மாக்கள் போல மாறுமனம்
காட்டிவிட்டான் இன்று..!
கனிருசித்த களவாணி
விதையிட்டவனை உதைத்தான்
விம்முகின்ற விவசாயி வேதனை எவனறிவான்..!
5.10.11
இழப்புணி_ஓர் அறிமுகம்
நீங்கள் இழப்புணியை சந்தித்ததுண்டா?
என்ன முழிக்கிறீர்கள்? இழப்புணி என்பவர் கணவன்,குழந்தை ஆகியோரையும் சொத்தையும்,பணத்தையும் இழந்த பெண்ணைக் குறிக்கும் பதமாகும்.
சொல்லும் _சொல்லாடலும்
சொல்லொன்று; பொருளிரண்டு..!
அஃகுள்_அக்குள்,கக்கம்
அகடச்சக்கரம்_இடுப்புஅணி(இடைவார்),கொடுங்கோல்வேந்தன்
அகடம்_அநீதி
அகத்தடியாள்_வீட்டுவேலைக்காரி,மனைவி
அகம்மியை_இழிகுலப்பெண்,பொதுமகள்(பரத்தை)
அகர்முகம்_வைகைறைப்பொழுது,விடியற்காலம்
அகலிடம்_பூமி,பரந்தநில உலகம்
அகவாட்டி_மனைவி,இல்லாள்
அகவேற்றம்_பஞ்சம்,தானியப் பற்றாக்குறை
அகாலமரணம்-ஓர் சொல்லாட்சி
3.10.11
துகிலுரித்தாலென்ன?
உன் புடவைகளை
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை-என்னைவிட
உன்னில் நெருங்கி உறவாடுகிறதே?
யுகயுகமாய்...!
என் பாட்டி சொல்லியது
நான் தும்மிய போது
எனக்கு ஆயுசு நூறென்று
இந்த அற்ப ஆயுசு போதாதெனெக்கு
ஓரிரு யுகமாவது வேண்டும்
உன்னோடு நான் வாழ..!
வேல்விழி...!
கன்னியர் கண்களை
வேல்விழிக்கு ஒப்பிடுகின்றனரே
"முள்போல்" குத்துவதாலா?
மருவிய பேத்தி
மேற்கண்ட "சொற்றொடரைப் (அல்லது) தலைப்பை" நீங்கள் படித்ததும் "பேத்தி எதைக்கண்டு மருவினாள்" என கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்கு விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
"பெயர் சொல்ல வந்தவள்" எனும் பொருள் கொண்ட தமிழ் வார்த்தையான "பெயர்த்தி" தான் "பேத்தி"யாக மருவியுள்ளது மனிதர்களின் காலச்சூழலில்.
24.9.11
பணம்
கழுதை தின்னும் காகிதம்
கடவுளுக்கு நிகரானதோ?
இக்கலியுலகில்.....!
17.9.11
எல்லாம் உன்னால் வந்த வினை
உன்னால் எனக்கொரு
அந்தஸ்து கிடைத்துவிட்டது
என்னவென்று சொல்லவா? -"கவிஞன்"
அறவும் துறவும்
9.9.11
மனமே..!சம்மதமா?
மதம் கொண்ட களிறுபோல
மலையழகி மோதியென்னை
என் மனக்கதவை தகர்த்துவிட்டாள்
சிவனேயென நானிருந்தேன்
விதியொன்று விளையாடி
மதிமயங்கி மண் கிடந்தேன்
மாலையிட வருவாயா
சேலையிடை காட்டியெனை
செக்குமாடாய் செய்த பெண்ணே!
விழியழகி உனைக்கண்டு
விழித்துவிட்ட விரலொன்று
கவியெழுதத் துடிக்குதடி - தினம்
கனவு கண்டு மயங்குதடி
சிந்தித்து சிந்தித்து
சிதறிவிட்ட சிறு கடலில்
முத்தெடுக்க முயன்ற நானும்
மூழ்கி மூழ்கி தத்தளித்தேன்
சிறுகொடியாள் உனை நானும்
சிறைப்பிடிக்க சீறுகொண்டேன்
கைகள் படபடத்து
கலக்கம் பல நான் கொண்டேன்
நெஞ்சின் நினைவுகளால் நித்தம் நித்தம் கிறக்கம் கொண்டேன்
விரலிடையில் நூல்முடியால்
விருத்தமாக நினைக்கின்றேன்
வாழ்வியலின் இருகோடாய்
வாழ்ந்திருக்க சம்மதமா?
21.8.11
நினைவெல்லாம் நீ!
பசுமரத்தாணி போல என்னெஞ்சில் பதிந்திருக்கும்
பருவகால தேவதையாய் நீ இருக்க
பஞ்சுமெத்தை மேனி கொண்ட நீயெனக்கு
பருகிட தந்துவிடு தேன்சிந்தும் உன் உதடுகளை
பக்கத்தில் நீ இருந்தால் பார் மறந்து நானிருப்பேன்!
பகலில் கூட கனவுகண்டு விழித்தெழுந்தார் போலிருப்பேன்
வைரக்கல்லை தோற்கடித்த வான்மதியே-நீ தான்
எனக்காக வேண்டும் வாழ்வின் திருமதியாய்!
9.8.11
ஒலி-ஒளிக்கவிதை(குழந்தை)
நீ எங்கள் சந்தோஷத்தின் சாவி
விடியல் முற்றங்களின் பூக்கோலம்
உனைக் காணத்தான்
மொட்டுக்கள் மலராய் அவிழ்ந்தன
உந்தன் சிரிப்பொலி
எங்கள் ஏழிசை கீதமானது
சூரியனை சுடராக்கி -உன்
மேனியில் சூடிக்கொண்டாய்
பொழுதுகள் பல போக்கி
காரியங்கள் காண மறந்தோம்
கண்ணீர்த் திவலைகள் -உன்னால்
கானல் நீராயின
உன் மழலை மொழி
தேவாரப் பாடலானது
கடவுளின் கொடை நீ -எம்
வாழ்வின் விடை நீ -எம்மை
எடுத்துச் செல்லும் வரலாற்றுப் புத்தகம் நீ
வானங்கள் உனைக் காண
வானவிலாய் வளைந்தன
நீர்த்துளிகள் உன் குளியலால்
தீட்சை பெற்றன
தெய்வங்கள் உன் வடிவில்
தரிசனம் தந்தன
எங்கள் இன்பத்தின் எவரெஸ்ட் நீ
கையிருப்பின் உண்மையான வைரம் நீ
வாழ்க நீ வளர்க
வளங்களின் வனப்போடு..!
16.7.11
இரண்டாம் சொர்க்கம்
ஒருபைசா செலவின்றி உலக அதிசயம்
பல உன்னில் கண்டேன்
ஒளிசிந்தும் கண்பார்வை 'நயாகரா" எனலாம்
"பாபிலோன்" தோட்டம் இரட்டித்ததோ உன்னில்
பிண்ணிய கார்குழல் சீனப்பெருஞ்சுவரோ.!
பசிபிக்கை ஜெயித்த தேன்சுவை கிண்ணம்
இறக்கத்திலமைந்த "இரண்டாம் சொர்க்கம்"
ததும்பிப் பின்பிதுங்கிய "பெட்ரோனாஸ்"
தாளமிடுகிது தன்னால்
"நைல்நதி" பாயும் "ஆற்றுப்படுகை"
நளினம் பாடுது என்னிரவதனில்
கொடுத்து வைத்த கண்களெனக்கு..!

